" புயல். "
கயல்விழியில்....
நிலம்பார்த்த...
காற்றுமண்டலமே...!
நீ...!!புயல் வழியில்..
புலம்பார்க்க புறப்பட்டாயோ...!!!
"மையம்"கொண்டவுடன்...
"ஐயம்"கொண்டோம்.!
"வங்காள விரிகுடா"வை..
வரவேற்று உபசரிக்கும்...
எங்கள் கடலோரமாவட்டங்கள்...!!
உடல்நோகச்செய்யாமல்.....
கருணை காட்டிவிடு..
எங்கள் "கஜா"வே..!!
தரைநடக்கும் "உயிர்வளி" நீ...!
இலை சமைக்க..
"கரியமிலவாயு" நீ..!!
நிலம் செழிக்க..
"நைட்ரஜன்" நீ..!!
படர்ந்திருக்கும்...
ஓஓஓ(O 3)சோனும் நீ!
உயிரின வாழ்வின்..
ஒட்டுமொத்தமும். நீ..!!
கரைகடக்கையில்..மட்டும் எங்களை.. "அயலாராய்"நினைக்காதீர்கள்...!!
எங்கள்......
"புயலாரே"!!!
மனிதர்தம்மில்...
மனிதநேயம்...
மறைந்திருக்குமேயன்றி....
"மறைந்திருக்காது"!!!
"உங்கள்"் மனதின் நேயமும் அப்படியே..
ஆகுக..!!
கனமழைதந்து..
கடந்துசெல்லுங்கள்...!எங்கள் தங்கத்தழிழ்நாட்டில்..
சற்று மெதுவாய்...
நடந்துசெல்லுங்கள்..!
நன்றி....!!!
நெப்போலியன்
ஆசிரியர்
0 Comments