"நரை"
~~~~~~~~~~~~~~~
இளமைவாளின்
உறைநீக்கி,
கரு 'மை'யின்
கறைபோக்கி
முது 'மை'யை
உரக்கச்சொல்லும்
வெண்மை நிறம்!
உரைக்கச்சொன்னாலும் அதுதானே "உண்மைநிறம்"!
கரு்(ம்)இமைக்குக்
கரு-மை- பூசியதால்,
ஒரிரு நரைக்கு(ம்)
புது-'மை' வீசியதால்..
கடுமைகொண்ட இளமை....
வெண்மைகூட்டியது,
உண்மைக்காட்டியது!
இ(ல்)லைநரையெனு
வயதில்,இளநரை
வருவது,'தலை'முறை
மாற்றமல்ல...
"தலைமுறை"-மாற்றம்!!!
வெண்நிற உணவுகளின்வீரியம்,
கதிர்வீச்சுக்
கருவிகளின் காரியம்
வெறுமை வாழ்க்கையின்
விதைகளாக,
இளநரைக்கு
வரைமுறைகள் போனது!
சூழ்நிலையும்
சுண்ணாம்பை
வார்த்தது!
'நரை'கண்டு "நகைப்போம்"!
நல்லுடலும் சமைப்போம்!!
இள-மை-மனதில்
வசிப்போம்!
முது-மை-யையும்
ரசிப்போம்!

நெப்போலியன் ஆசிரியர்