ஸ்டீஃபன் ஹாக்கிங்
ஓர் இதய அஞ்சலி
💐💐💐💐💐💐💐
இயற்பியலின் இதயமே!
நீ! மறைந்தாலும்
உதயமே!
நீ..இங்கிலாந்தில்
பிறந்தாலென்ன...
எங்கிலாந்தில்?
பிறந்தாலென்ன...
உலகிற்கு 'அண்டம்'
ஒன்றுதானே.!..
உன்புகழிற்கு 'அண்டம்' குன்றுதானே!
உறுப்புகள் 'சிறப்பு' கொண்ட..இளவயதிலும்....
அங்கங்கள் அமைதிகொண்ட
வளர்வயதிலும்...
உன் சிந்தனைச்
சிறகுகள் வலசைபோக..
வருந்தியதில்லை...
உன்விழியிலிருந்து
விண்வெளிவரை...
ஒவ்வொரு 'துகளும்'..
'இருளும்''பகலும்'..
இயங்கிக்கொண்டேயிருக்கும்...
உன்னைத்தவிர!!!..
தன்னம்பிக்கைக்கே..
உன்நம்பிக்கைதான்
உதாரணம்...!
உன்மூளைச்செல்களுக்கு...
உன்நம்பிக்கையே
சாதாரணம்...
கருந்துளைகளின்
கட்டமைப்பு..
'சார்புக்கோட்பாடு'களின்..
கூட்டமைப்பு..என...
அண்டவியலில். நீ..
கண்டவைகள்..
சக்கரங்களாய்
சுழன்றுவரும்...
பூமி சுழலும்வரை....
'ஆக்ஸ்ஃபோர்டின்'
அறிவியல் அகராதியே!!
ஐன்ஸ்டின் பிறந்தநாளா.!...
நீ..மறைந்தநாளாக..
வேண்டும!!்...
'இயல்பியல் இழந்தும்
இயற்பியல் இசைத்தவரே!
வாழ்வியல் குழைந்தும் 'வானியல்'
அசைத்தவரே!
எழுதிமு(ப)டிக்கையில்...
கண்ணீர் விழுந்தது..
விழுந்தது.கவிழ்ந்தது
அதிலொருதுளியில்
உங்கள்....
அழகியமுகத்தின்..
"பிம்பம்"...........
ஓ..பிம்பமும்
இயற்பியல்தானோ!!!!
அமைதிகொள்....
ஆத்மாவே...
ஹாக்கிங்
உறங்கட்டும்.......
உடலால்மட்டும்....!!!

        நெப்போலியன்
              ஆசிரியர்