வா(தா)ழ்வு மண்டலத்திற்கோர் வாழ்த்து

காற்றழுத்த...
தாழ்வுமண்டலமே!
எங்கட்கு வாழ்வளிக்கும்..
வாழ்வுமண்டலமே!!
இந்திய தீபகற்பத்தின்
'கவச குண்டலமே'!!!!!
காட்டுமரங்கள்..
மட்டுமே...
எங்கள்(க)வசம்!
வீட்டுமரங்கள்...
வளர்ப்பது எங்களுக்கு
கிடைக்கா..(சு)வாசம்..
வருங்கால
'மழை'வாழ்வுக்கு..
நீ!நீ!....மட்டுமே
விலாசம்!!!!!
'மேலடுக்கு சுழற்சி'யாய் வந்து..
மிகுமழை கொட்டிச்செல்!
'கீழடுக்கு சுழற்சி்'யாய்வந்து..
வெகுமழை
விட்டுச்செல்!
எங்கள் மீனவர்களும்
வாழவேண்டும்..
அவ்வப்போது
எட்டிச்செல்!!!
எங்கள் காட்டு
மரங்களுக்கு
கரைபுரளும்
கனிமவளம்..
கட்டிச்செல்...!
கருமைஉறையும்..
எங்கள் கார்மேகங்கட்கு.
நீங்கள்தானே..
ஒருங்குசேர்க்கும்..
தட்டைச்செல்!
நாங்கள் விண்ணில்வெப்பம்
விதைத்தாலும்!
புகையை மேகத்திலும்
புதைத்தாலும்!
மன்னித்து
மறந்துவிடு...
நீ!!மறுபடி..மறுபடி..
பிறந்துவிடு..
இனி எங்களுக்கு...
"தாழ்வுமண்டலமே"...
"வாழ்வுமண்டலம்"!!!
          
   நெப்போலியன்  
           ஆசிரியர்