ஆசிரியர்கள்
🖊🖊📖📖📖🖊🖊
ஆச்சர்யர்கள்....!!
ஆம்...!!
களைப்பை...
உழைப்பாக்கும்..
கடமை...!!!
உழைப்பை...
பிழைப்பாக்கா(த)
பெருமை...!!!
பிறர்பிள்ளை
எனப்பார்க்கா(த)
உரிமை....!!!
கற்பித்தல்...
கடமையாக்கா(த)
"முழுமை"...!!
ஆசிரியர்க்கு....,,.
உயிர்ப்பூட்டும்....
பிள்ளைகளே...,
"உடைமை"...!!
புத்தகமே....
அட்சயபாத்திரம்்...!!!
சுண்ணக்கட்டியே...
"சூத்திரம்"..!!!
தொழில்நுட்பங்கள்...
துணைவந்தாலும்....
எங்கள் உயிர்நுட்பக்
கற்பித்தலுக்கு...
"'எம்மாத்திரம்"....?
மீத்திறன் மாணவர்கள்....
புரிதலில்..
குறைவானவர்கள்..!!
"அரும்பு"மன பிள்ளைகள்...!!
குரும்பு "குண"
தொல்லைகள்...!!!
அடடா....
எத்தனை...
உளவியல் கலவைகள்....!!!
நேராக்கி..சீராக்கி..
கூராக்கி...வேராக்கி..!
சமூகம் செழித்திட..
"ஆறாக்கி'..!!
நோக்கிடவே.
ஞானிகளாவதில்லை
நாங்கள்...!!
தோணிகளாய்..!!!
ஏணிகளாய்....!!
தொலைவிருந்து..
பார்க்கையில்..!!
வெறுமையே..
பெருமையாய்...
கருமையே...
அருமையாய்...
"நிறைவுகளின்"்...
நீலவானமாய்...
நாங்கள்...
ஆசிரியர்கள்...!!!
அட...!!!
ஆச்சரியர்கள்....!!!!
நெப்போலியன்
ஆசிரியர்
0 Comments