""தீபஒளித்திருநாள்"'
💥💥💥💥💥💥💥
எத்தனை(யோ)திருநாட்கள்...!!
தமிழர் வாழ்வில்...!!!
அத்தனையும்...
சிறப்புகள்தான்...
மனிதர் வாழ்வில்...!!
காரணத்தின்
தோரணங்கள் பூரணங்களாகாமலிருக்கலாம்...!!!
ஒன்றுகூடுவது...
ஒன்று"பத்தாதா?....!!
பட்டாசு "வெடிக்க"..!!
பாசங்கள் 'வடிக்க'...!!
பலகாரம் "பிடிக்க"..!!!!
அதிகாலை எழுச்சி...!!
எள்ளெண்ணைக்-குளிர்ச்சி...!!!
புத்தாடை மலர்ச்சி...!!!
வெடியொலியின் 'மருட்சி...!!
குழந்தைகளின்...
குளிர்ச்சி...!!!
அனைவருக்கும்...
"ஆடைகட்டும்'.
மகிழ்ச்சி....!!!
ஒருநாள்....
திருநாள்...
"பெருநாள்"....!!!!
"முருக்குக்காட்டும்"
அதிரசம்....!!!
அதிரசபின்னலாய்...
முருக்கு...!!!
"சுழி"நன்றாயமைந்த
சுழியன்...!!!
"பூந்திக்கட்டு" லட்டு..!!
சுட்டிஉருண்டை...
கெட்டிஉருண்டை...!!!
சிற்றுருண்டை சீடை..!
பட்டை, தட்டை..!!
இனிப்போங்கிய..
மென்பண்டங்கள்..!
நாகரிக...
தின்பண்டங்கள்..!!!
கம்பிமத்தாப்பாய்....
விளையாட...!!!
சங்குசக்கரமாய்
சதிராட...!!!
நாவின்சுவையரும்புகளில் நடமாட...!!!
ஒத்தைவெடி பதைபதைக்கும்...!!
ஊசிவெடி மனதை...
"தைக்கும்"....!!!!
உறவுகள்கூடி...
உரிமைகள்தேடி...
உணர்வுகள்பாடி....
ஒருநாள் "முகங்கள்"
பார்த்துக்கொண்டோம்...!!
அகங்கள் கோர்த்துக்கொண்டோம்...!!!
பிடிக்காவிட்டாலும்..
வெடிக்காவிட்டாலும்...
வாழ்த்துவோம்...
அன்பர்களே...!!!
வாழ்க தீபாவளி....
வான் ஒளியிலும்...!!!!
"வாணலியிலும்"!!😀
               
       நெப்போலியன்
          ஆசிரியர்