'நெருஞ்சில்முள்"
ஃஃஃஃஃஃஃஃஃஃ
குறிஞ்சிமுள்ளாய்..
போனது கொடுமை!
வரப்புகளில் பரப்பிவைத்த..
படர்கொடி..!
எவ்விடமும்
இயல்பாய் வளரும்
பசுமை சுடர்கொடி..!
நெருஞ்சில்முள்குத்தா(த) குழந்தைகள்பாதம்..
நெருஞ்சில்முட்கள் பார்க்கா மனிதசமூகம்...!
இயற்கைத்தாயை
முதியோர்இல்லத்திலும் பார்க்கமுடியாது!
முன்னோர்பாதங்களில் முன்னூறு முட்கள்..
குத்த....,எடுக்கும் விரல்களுக்கும்...
இலவச "அக்குபஞ்சர்"!
நெருஞ்சில்முள்..
தேடிச்செல்வோம்..,
தேடிக்'கொல்வோம்'
விடுத்து..
தேடிக்கொள்வோம்...!!
செயற்கையாய்வளர்க்க..
முட்கள்..புற்களல்ல..!
முட்கள் குத்திக்கொள்ளும்..
குழந்தைக்குத்தான்..
பஞ்சின் மென்மை..
புரியும்!!
வாழ்வின் உண்மை..
"புரியும்"!!!
வாழ்க..நெருஞ்சில்..
மனிதர் நெஞ்சில்... !!!
நெப்போலியன்
ஆசிரியர்
0 Comments