அம்மா
============
உயிர் 'உயிர்த்தவள்!
உடல் 'வளர்த்தவள்'..!
உளம் 'வார்த்தவள்'..!
நலம் 'பார்த்தவள்'...!
வளம் 'பூத்தவள்'...!
களம் 'காத்தவள்'..!
பலம் 'சேர்த்தவள்'..!
நலன் 'கோர்த்தவள்'.!
பலன் 'விடுத்தவள்'..!
கலன் 'கொடுத்தவள்'
அன்பை "நெய்பவள்"
அன்னை!
துன்பம் "கொய்பவள்" அன்னை..!
உழைப்பை
"எய்பவள்" அன்னை!சேவைகள்
"செய்பவள்" அன்னை!
எல்லாமாய்
ஆனவள் அன்னை!!
நாம் வாழ 'நடமாடும்'
தென்னை!!!
எல்லாமும்..எல்லாமும்.. அம்மா...!!
இரு(ற)க்கும் வரை
நாம் மறக்கலாமா!!!!
அன்னையர் தினத்தில் மட்டுமல்ல.....
அனைத்து தினத்திலும்...
நினைப்போம்...!
"அம்மா"!!!!!
நெப்போலியன்
ஆசிரியர்
0 Comments