பூமி தினம்
         (22-04_2018)
      🌎🌎🌎🌎🌎🌎
சுழலும் உயிர்க்கோளம்...!
சுழன்றால்தான்
உயிர்கள்வாழும்..!
சூரியனைச்சுற்றும்
சுறுசுறுப்பு...!!
தானே சுழலும்
விறுவிறுப்பு..!
அதனால் உனக்குள்
உயிர்துடிப்ப!
அத்தனை உயிர்களும்...
உன்'வார்ப்பு'!
உன்(னா)னில் மட்டுமே உயிர்வளர்ப்பு!
ஒன்பது கோளில்
உயர்ந்தவரே!
உயிர்கள் வாழவே...
பிறந்தவரே!!!
மழை'பிறக்க'
மரம்வளர்த்தாய்!
உயிர் உயிர்க்க
மண் விதைத்தாய்!
நீ!!நீ!!மட்டுமே
உயிரினங்களின்..
ஒரே.....'தாய்'!!!!
உன் ஒரு சுழற்சியில்
எத்தனை உயிர்த்துடிப்பு!
எத்தனை பயிர்வளர்ப்பு!
நல்லவேளை..
மூன்றுபங்கு
நீரமைத்தாய்..!
ஒருபங்கு நிலத்துக்கே
ஓராயிரம் ஏவுகணை,
நூறாயிரம் அணுகுண்டு!
உனைத்துளைக்க அல்ல...!
உயிர்த்'தொலைக்க'!
உன்னுடல் துளைத்து
நீரையும்!
உன்னுடல் குளிக்கும்
ஆறையும்!
நீ..தேக்கிவைத்த.
(கடல்)நீரையும்!
உன்தலைமுடிதான்
காட்டையும்..
உன்மண்கொடுத்த
வீட்டையும்..
நாங்கள் பிரித்துக்கொண்ட
நாட்டையும்..
நீ ...கொடுத்தாய்
நாங்கள் உனக்கு
என்னகொடுத்தோம்?
நன்றிசொல்லா(த)
நாகரிக மனிதர்கள்
நாங்கள்!!
எங்கள் பிழைகளை
மன்னித்துவிடு...
உனை,காக்காமல்
விட்டுவிட்டால்...
"மௌனித்துவிடு"
         நன்றியுடன்........

       நெப்போலியன்
             ஆசிரியர்