உலக புத்தக தினம்
      (23-04-2018)
📘📘📘📘📘📘📘
அறிவு தாகத்தின்-'ஊற்று'!
கல்வி சுவாசத்தின்
'காற்று'!-புத்தகங்கள்!
கணினித் தொழில்நுட்பம்..
கைக்கொட்டிச்சிரித்தாலும்..
உங்களுக்கு இல்லவேயில்லை
-'மாற்று'!!!
வாழ்ந்து மு(ப)டித்த...
நம் முன்னோர்கள்...
எல்லாவற்றிற்கும்..
'முன்னோர்கள்'ஆனது.
உங்களால்தான்..
புத்தகங்களே!
நல்லோர்களானது
உங்களால்தான்..
'நூல்களே'!
'படிக்காத மேதைகளும்'
படிக்கச்சொன்னது..
உங்களைத்தான்!உலகின் உன்னத இடம் நீங்கள் 'வாழகம்தான்'!!அட!
நூலகம்தான்!'
'கற்றவைகள்:
'பெற்றவைகள்'
'மற்றவைகள்'
'உற்றவைகள்' அனைத்தும்......
உங்களில்தான்..
பதிக்கப்படுகிறது!
பதிப்பிக்கப்படுகிறது
புதுப்பிக்கப்படுகிறது!
புத்தகதிருவிழாக்கள்,
உங்கள்.......... மகத்துவத்தையும்..
அகத்துவத்தையும்
மனிதர்க்குணர்த்தும்!நீங்கள் பழைமையாகா
புலமையாளர்கள்..!
உயிரற்ற "உயிர்ப்பாளர்கள்"!
நீங்கள், 'படைத்தவர்'
"அகம்"காட்டுவது..
அதிசயமல்ல..
படைத்தவர்.."முகம்"
காட்டுவதே அதிசயம்!
திருக்குறள் படிக்கையில் வள்ளுவர்
'முகம்'வரிகள்தோறும்............
வருவதுபோல்!
பள்ளிப்பாடநூல்கள்
அறிவு'தேடும்' மாணவர்க்கும்...
அறிவைச்'சூடும்' ஆசிரியர்க்கும்!
ஆபரணங்களல்லவா!
ஒளிவீச்சி(PROJECTOR)பல்வேறு நுட்பங்களை துலங்கவைக்லாம்..!
ஆனால்,'விளங்கவைக்கும்'வீரர்கள்-கல்வி அறிதலின் 'சூரர்கள்'
நீங்கள்தான்!!!!
உங்களுக்கு...
"புலனத்தில்"கவிதை
எழுதாமல்..புத்தகத்தில் எழுத ஆசைதான்...!
ஐம்புலன்களும்..
அருமைகொள்வது
புத்தகம் படிக்கையில்தான்..
புலனத்தி(ல்)ன்,
சலனம் மின்னல் மாதிரி!
நீங்கள் "வானம்'!
அறிவின்"ஞானம்!
உங்களை,
இருக்கும்வரை...
போற்றுவோம்!
நாங்கள் இருக்கும்வரை...
உங்களுக்குத்தான்
இறப்பென்பதில்லேயே!
பிறப்புமட்டும்தானே!

       நெப்போலியன்
            ஆசிரியர்