"ஏன் இப்படி செய்தாய்?"
💧💧💦💦💧💧
என்னகோபம்...!?
எங்கள் கடலோர மக்கள்மீது.....!!!
என்னத்தவறு..
செய்தோம்...?
மரங்கள் பூமித்தாயின்..
கரங்களல்லவா!!ஒடித்துப்போடுவதும்..
மடித்துப்போடுவதும்...
பஞ்சபூதங்களின்...
ஒருவனுனக்கு....
கொஞ்சமும்...
அழகல்ல.......!!
வாழவைத்து....
வீழவைப்பதுதான்...
வலிக்கிறது...!!
வாழவைக்கும்...,
"உயிர்வளி" தருவதால்...
எங்களை சூழவந்து...
"உயர்வலி'"தந்தாயோ...!!!
உனக்கு,பெயர்சூட்டி,
நீ.."வளிக்காட்டி"...
வரும்பாதையின்..
வழி காட்டி..!!
வந்தாரை வாழவைக்கும் நாங்கள்...
உன்னை வரவேற்று...
""காத்திருக்க"'.!!!!
நீ..தரைநடந்தபோதும்
கரைகடந்தபோதும்..,,
உருண்டததெங்கள்..
வாழ்வாதாரம்...!!!
புரண்டதெங்கள்...
பொருளாதாரம்...!!!
இரண்டுமே மீளும்...!!!
ஆனால் அழிந்ததே...
உந்தன் "அருளாதாரம்" மீளுமா??????
'செயற்கை மரங்களை.
சீர்செய்து..
மின்தொடர்பை
தொலைத்தொடர்பை
பெறுவோம்....!!!
ஆனால் இயற்கை...
மரங்களை.....
நீ...அழி(ளி)த்த...
இனிய வரங்களை...
எப்படிப் பெறுவோம்...?
கூறாவலிதந்த...
சூறாவளியே....!!!
சொல்லாமல்வந்த
சுனாமியையே....
சபிக்காதவர்கள்
நாங்கள்..!!!
சொல்லிவந்த...
உன்னையா..
சபிக்கப்போகிறோம்..!
இது தமிழர்களின்...
"இயற்கை"...!!!
நீ...தவறிய "இயற்கை"....!!!!
இனி வரும்போது
முகத்தைக்காட்டாதே..
"அகத்ததைக்காட்டு
ஏனெனில் நீ இயற்கை அன்னை!!!
இப்போது ......
நீயா?இயற்கை அன்னை...!!!
நெப்போலியன்
ஆசிரியர்
0 Comments