எங்கள் பள்ளி காட்டுப்பூவரசு மரம்
எங்கே..... உன்முகத்தைக்...
காட்டு பூவரசுமரமே.!!!
உன் அகன்ற இலைகள் அசைத்து...
அழகு இசையை.
மீட்டு பூவரசுமரமே...!!
பள்ளிமுகத்தின்...
"மீசை"மரமே....!!!
எங்களை தினமும்...
வரவேற்கும்....
ஓசை மரமே....!!!
நீ...பிறந்தது,வளர்ந்ததது,படர் ந்தது,மலர்ந்தது.....எல்லாம் பார்த்து...மனது..
மகிழ்ந்தது..
இன்று நீ விழுந்தது....
பார்க்க இதயம்....
அசைந்தது..!!
புங்கன்மரங்களுக்கு்கூட சகோதரர்களுண்டு..!!
நீ...."தனி ஒருவன்"...!
உனைப்போல கிடைக்குமா?
இனி ஒருவன்...!!
பள்ளியில்.....
தேசியக்கொடியேற்றிடவே அதனோடு
பேசிக்கொண்டிருப்பது நீ மட்டும்தானே..!!
மாணவர் அணிவகுப்புகள்..!!
வகுப்பிற்கேற்ற தனிவகுப்புகள்...!!
பலவிதமாண(ன)வர்..
பகுப்புகள்...!!
தலைமைஆசிரியரின்
பொறுப்புகள்..!!!
ஆசிரியர்கள் நடத்தும்..வகுப்புகள்..!
அனைத்தையும்...
பார்த்துவளர்ந்த.,,
உன்னை......,,
மறந்து(ம்)மரமாக...
இருக்கமுடியவில்லை..!!உன்னை வெறும்...
மரமாகவே...
நினைக்கமுடியவில்லை.....!!
தலைசாய்த்து...
பணிவுகாட்டிய நீ..!!
"தழை"சாய்க்க...
துணிவுகாட்டியது..
துயரம்....!!!
புயல்சாய்த்த...
உன் முயலழகு முழுமை.....,
மோட்சம் பெறட்டும்...!!
உன் நிழல்தந்ந...
நினைவுகளுடன்......
நெப்போலியன்
ஆசிரியர்
GHSS -நெய்வாசல் தஞ்சாவூர் மாவட்டம்
0 Comments